Monday, January 11, 2010

அஜீத்தின் அதிரடி பேச்சு-விளம்பரம் அவசியம் இல்லை




அந்த காலத்திலிருந்து பத்திரிகையாளர்களைதான் எங்களின் நெருங்கிய சொந்தங்களாக நினைக்கிறோம். அதனால் உங்கள் முன்னிலையில் இந்த விழா நடக்கிறது” என்றார் ராம்குமார். அசல் உருவான விதத்தை ஒரு படம் போலவே விவரித்தார் டைரக்டர் சரண். யாருக்கும் இதுவரை சொல்லாத எக்ஸ்க்ளூசிவ் தகவல் என்று அவர் சொன்ன விஷயம், படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் அஜீத். அப்பா மகன் என்ற இரண்டு வேடங்கள். அஜீத்தை கட்டளையிடுகிற மாதிரி வேடம் என்பதால், இதற்கு பொருத்தமாக யாரை நடிக்க வைக்கலாம் என்று ஏராளமான யோசனை சரணுக்கு. லண்டனில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். திடீரென்று, “நானே அந்த இன்னொரு கேரக்டரிலும் நடித்துவிடுகிறேனே” என்றாராம் அஜீத். பிறகென்ன? அஜீத்திற்கே அப்பாவாகிவிட்டார் அஜீத்!
இப்படத்தை பார்க்கிற ரசிகனுக்கு படத்தில் வருகிற கேரக்டரை குறிக்க வேண்டும். அதே பாடல் சிவாஜி கணேசனை குறிப்பதாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு நிபந்தனையை சரண் சொல்ல, கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று பரத்வாஜின் குரலில் ஒலிக்கிறது. நிஜமாகவே உயிரை உருக்கும் பாடல் அது. எங்கே எங்கே என்று இன்னொரு பாடல். “சினிமாவில் என்னை முதுகில் குத்தியவர்கள் நிறைய பேர். இந்த பாடல் வரிகளை கேட்கும் போது எனக்கு அந்த நினைவெல்லாம் வந்தது” என்றார் அஜீத்.
“ஒரு நல்ல புராடக்டுக்கு விளம்பரம் அவசியம் இல்லைன்னு நினைக்கிறவன் நான்” -அஜீத்தின் பேச்சில் இடம் பெற்ற முக்கியமான வார்த்தைகள் இது. அதை ஏன் பத்திரிகையாளர்களையும் வைத்துக் கொண்டு சொல்ல வேண்டும்? அதுவும் இத்தனை லட்சம் செலவு செய்து போஸ்டர்கள் அடித்து ஒட்டிய பின்?
நொறுங்க கட் பண்ணிய ஹேர் ஸ்டைல், அதில் அங்கங்கே எட்டிப்பார்க்கும் வெள்ளை முடி, மூன்று நாள் தாடி... இப்படி இமேஜ் பற்றி எவ்வித கவலையும் படாத அஜீத், கசங்காத கோட் சூட்டுடன் கம்பீரமாக வந்திறங்கிய இடம் கலைமகன் சிவாஜியின் அன்னை இல்லம்! அசல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இங்குதான் நடத்தினார்கள். (நினைத்திருந்தால் நேரு ஸ்டேடியத்தில் கூட நடத்தியிருக்கலாம்)

No comments:

Post a Comment